
ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரிக்கு டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பியது தெரிய வந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் செய்தார். எனினும், ட்விட்டரில் போலி கணக்குகளை நீக்க வேண்டும் என்று கூறிய மஸ்க், போலி கணக்குகளை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தைக் கூறி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஆனால், அதற்கு முன்பே, ஜூன் 28ஆம் தேதி ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி பராக் அகர்வாலுக்கு அவர் அனுப்பிய குறுஞ்செய்தியில், தனது நிதி நிலை குறித்து ட்விட்டர் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டு நச்சரித்ததாக கூறியுள்ளார். அதுபோல தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் பராக் அகர்வாலுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments