
மதுரையில் கொள்ளையடிக்க வந்த வீட்டில் அசந்து தூங்கிய திருடனை வீட்டை வைத்து பூட்டிய உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மதுரை அவனியாபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள பராசக்தி நகரைச் சேர்ந்தவர் ரத்தினவேல் (50). இவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் வெளியூர் சென்றிருந்தனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ரத்தினவேல் நேற்று வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் அறையில் மர்ம நபர் ஒருவர்., அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அந்த நபர் பார்ப்பதற்கு திருடன் போல இருந்ததால் அவரை வீட்டின் உள்ளே வைத்து பூட்டிய ரத்தினவேல் உடனடியாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த நபரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த இளைஞர் மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த நடராஜன் (21) என்பது தெரியவந்தது. மேலும்., இதையடுத்து அவரை கைது செய்த போலீசார விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Cm9uTlb
via IFTTT

0 Comments