
கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை அதிமுக துணைப் பொதுச்செயலாளர்களாக நியமித்து இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக கட்சி விதிகளில் சட்டதிருத்தம் செய்திருந்தனர். இந்நிலையில் துணை ஒருங்கிணைப்பாளர் என வருகிற இடங்களிலெல்லாம் அவர்கள் துணை பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள் என திருத்தம் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதுகுறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில், அதிமுகவின் கழக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் கேபி.முனுசாமியும், நத்தம் விஸ்வநாதனும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இபிஎஸ் முன்பு வகித்த தலைமை நிலைய செயலாளர் பதவியில் தற்போது எஸ் பி வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைப்புச் செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், ப. தனபால், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், ஓஎஸ்.மணியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா, பெஞ்சமின், பாலகங்கா ஆகிய 11 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக இருந்த தமிழ் மகன் உசேன் அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து சி. பொன்னையன் விடுவிக்கப்பட்டு அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆடியோ விவகாரத்தால் பொன்னையனின் அமைப்பு செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எம்ஜிஆர் மன்றம் தான் முதல் முதலில் அதிமுகவில் அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட முதல் பிரிவு என்றாலும் அதிமுக பொறுப்பை விட குறைவானதாக கருதப்படுகிறது.
<iframe src="https://ift.tt/Tpt0D4l" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/maCYMKG
via IFTTT

0 Comments