
உடலில் உள்ள மூக்கு, உதடு, கன்னம் போன்ற பாகங்களை அழகாக்குவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதும், உடலின் எடை மற்றும் கொழுப்பை குறைக்க சில அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லட்சங்கள், கோடிகளில் பணத்தை வாரி இறைத்து, அப்படியான சிகிச்சை முறைகளை மேற்கொண்டாலும் அனைவருக்குமே அது பலனை தந்துவிடாது. அதற்கு எக்கச்சக்கமான உலக பிரபலங்களே சாட்சியாக இருப்பதை பல இணையதள பதிவுகள் மூலம் கண்டிருப்போம்.
அந்த வகையில் லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய மெல்லிய புருவத்தை அறுவை சிகிச்சை செய்து மாற்றியிருக்கிறார். ஆனால் புருவ மாற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகும் அவருக்கு அது தொல்லையாகவே இருந்திருக்கிறது.

அது ஏன் தெரியுமா? வாங்க விரிவாக பார்ப்போம்.
36 வயதுடைய இசபெல் குட்ஸி என்ற பெண் தன்னுடைய மெல்லிய புருவத்தை பட்டையாக வரைவதற்காகவே ஒவ்வொரு நாளும் சுமார் அரை மணிநேரம் செலவிட்டு வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருக்கு இது விரக்தியை கொடுத்ததால் புருவ மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக மிரர் செய்தியிடம் பேசியிருந்த இசபெல், “அமெரிக்காவில் இருந்த போதுதான் eyebrow transpalnt பற்றி அறிய முடிந்தது. அது குறித்து இணையத்திலும் தேடி பார்த்தேன். விலை உயர்ந்ததாகத்தான் இருந்தது” எனக் கூறியிருக்கிறார்.
ALSO READ:
”வாழ்க்கைய பாருங்க.. செல்ஃபோன் ஓரமா இருக்கட்டும்” - சொன்னது யார் தெரியுமா?
அதன்படியே போலந்த் நாட்டில் ஒன்றரை லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவழித்து மைக்ரோபிளேடிங் முறையில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இதே சிகிச்சை லண்டனில் செய்துகொண்டால் நான்கரை லட்சத்துக்கு மேலாகுமாம்.
அந்த அறுவை சிகிச்சை எப்படி நடந்தது தெரியுமா?
இசபெல்லின் தலையின் பின்பகுதியில் இருந்து அவரது மயிர்க்கால்களை எடுத்து, சுமார் மூன்றரை மணிநேரத்துக்கு கையாலேயே அவரது புருவத்தில் மருத்துவர்கள் செருகியிருக்கிறார்கள். அந்த சிகிச்சை முடிந்ததும் அவரது பட்டையான புருவத்தை கண்டு இசபெல் சந்தோஷத்தில் துள்ளி குதித்திருக்கிறார்.

ஆனால் இதில் இருக்கும் ஒரு பின்னடைவு என்னவென்றால் தலையின் முடியை எடுத்து புருவமாக்கியிருப்பதால் அது தொடர்ந்து வளரக்கூடியதாக இருக்கும். ஆகவே அவை வளர வளர வேறு வழியின்றி இசபெல் வெட்டிதான் ஆகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
வெட்டாமல் விட்டுவிட்டால் அவ்வளவுதான் தலைமுடியை போன்று நீளமாக வளர்ந்துவிடும்.
எனக்கு பிடித்தது போல என்னுடைய புருவத்தை மாற்றியமைத்துக் கொண்டேன் எனக் கூறிய இசபெல், அறுவை சிகிச்சை வலியில்லாமல் நடந்தது. ஆனால் முடியை எடுப்பதற்காக தலையிலும், புருவத்திலும் செலுத்தப்பட்ட அனெஸ்தீசியாதான் வலியை கொடுத்தது எனவும் கூறியிருக்கிறார்.
ALSO READ:
இங்கலாமா டாட்டூ போடுறது? - வியந்துப்போன அமெரிக்க மருத்துவர்.. நடந்தது என்ன தெரியுமா?
தொடர்ந்து பேசியிருந்த இசபெல், இந்த சிகிச்சையால் எனது வாழ்க்கையே மாறிவிட்டது. இது நிச்சயமாக எனக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது. ஏனெனில், நான் எப்போதும் என் புருவங்களை வெறுத்திருந்தேன். ஒருபோதும் என் முகத்திற்கு பக்கத்தில் வைத்து போட்டோ எடுக்க மாட்டேன். ஆனால் இனிமேல் இந்த புருவத்தால் மேக்கப் செய்வதற்கான நேரத்தை நான் மிச்சப்படுத்தியிருக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/lyanwDt
via IFTTT

0 Comments