தட்டச்சு பிழை- 22 மாதம் சிறையில் தவித்த நைஜிரீய இளைஞர்! ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

LATEST NEWS

500/recent/ticker-posts

தட்டச்சு பிழை- 22 மாதம் சிறையில் தவித்த நைஜிரீய இளைஞர்! ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

தட்டச்சு பிழை காரணமாக 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய இளைஞருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அக்டோபர் 23, 2020 அன்று மகாராஷ்டிர காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti Terrorism Squad) நைஜீரிய இளைஞர் ஒருவரிடம் சோதனை நடத்தியதில் அவரிடம் இருந்து 116.19 கிராம் எடையுள்ள கோகோயின் மற்றும் 40.73 கிராம் எடையுள்ள குங்குமப்பூ நிற இதய வடிவ மாத்திரைகள் அடங்கிய பை மற்றும் 4.41 கிராம் எடையுள்ள எக்ஸ்டசி மாத்திரைகள் எனக் கூறப்படும் பிங்க் நிற மாத்திரைகளை கைப்பற்றி அவர்மீது வழக்குப்பதிவு செய்தனர்.

NDPS Act : Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985 - iPleaders

கைப்பற்றப்பட்ட பொருட்கள் இரசாயன பகுப்பாய்வு (CA) சோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. தடயவியல் ஆய்வகத்தின் உதவி இயக்குனரின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் “நைஜீரியரிடம் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள்கள் கோகைன் அல்லது எக்ஸ்டசி அல்ல. அவை லிடோகைன், டேபென்டாடோல் மற்றும் காஃபின். இருப்பினும், லிடோகைன் மற்றும் டேபென்டாடோல் ஆகியவை போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் (Narcotic Drugs and Psychotropic Substances Act) கீழ் வரும்" என்று கூறியிருந்தார்.

The NDPS Act : Adequate or Not?

இதன்படி நைஜிரீய இளைஞர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் தடய அறிவியல் ஆய்வகத்தின் உதவி இயக்குனர் ஒரு வருடம் கழித்து தனது வருத்தத்தை தெரிவித்து பகுப்பாய்வை சரிசெய்து, இளைஞரிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் NDPS சட்டத்தின் கீழ் வராது என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.

Nigerian man was jailed for typo. Now he gets Rs 2 lakh - Law News

இதையடுத்து நீதிபதிகள், “நைஜீரியரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருள் போதைப்பொருள் அல்ல. எனவே அவர் ஜாமீனில் விடுவிக்க தகுதியானவர். அனைத்து இந்திய குடிமக்களுக்கும் மட்டுமல்ல. ஒரு வெளிநாட்டவருக்கும் சுதந்திரத்தை சட்டம் உறுதி செய்கிறது. ஒரு விதிவிலக்கான வழக்காக, 6 வாரங்களுக்குள் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடுகிறோம்.” என்று உத்தரவிட்டனர்.

அரசு வழக்கறிஞர் தாகல்கரிடம் இழப்பீடு வழங்குவதற்கான அறிவுறுத்தல்களை நீதிபதி டாங்ரே கேட்டபோது அவர் கால அவகாசம் கோரினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, “உடனே தொலைபேசியை எடுத்து இழப்பீட்டிற்கான அறிவுறுத்தல்களை பெறுங்கள்” என்று கூறினார். சிறிது நேரம் கழித்து பதிலளித்த அரசு வழக்கறிஞர். “நான் தலைமைச் செயலாளரிடம் பேசினேன். அவரது அறிவுறுத்தலின் பேரில், ஆய்வக அதிகாரிக்கு எதிராக அரசு விசாரணையைத் தொடங்கும். இழப்பீடு வழங்குவதற்கான கொள்கை தற்போது அரசிடம் இல்லை” என்று கூறினார்.

Bombay HC Awards Rs 2 Lakh Compensation to Nigerian Man Jailed Beacause of ' Typo'

அப்போது குறுக்கிட்ட நீதிபதி டாங்ரே, “எனவே கொள்கை இல்லாத காரணத்தால் மக்களை சிறையில் அடைத்து இழப்பீடு வழங்காமல் இருக்க முடியுமா? ஒரு நபரின் அடிப்படை உரிமைகளை பறிக்கும்போது, உங்களுக்கு ஒரு கொள்கை தேவையா? நானே இழப்பீடு வழங்க உத்தரவிடுகிறேன். இளைஞருக்கு வழங்கும் இழப்பீட்டு தொகையை பிழை செய்த ஆய்வக அதிகாரியிடன் இருந்து பெற்றுக் கொள்ளலாம்” என்று உத்தரவிட்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/EcA2vCh
via IFTTT

Post a Comment

0 Comments