அதுபோல போதை உண்டா எங்கும்.!? வெளியானது வெந்து தணிந்தது காடு 2வது பாடல்

LATEST NEWS

500/recent/ticker-posts

அதுபோல போதை உண்டா எங்கும்.!? வெளியானது வெந்து தணிந்தது காடு 2வது பாடல்

”மறக்குமா நெஞ்சம் மனசெல்லாம் சலனம்” என்ற வெந்து தணிந்தது காடு திரைபடத்தின் இரண்டாவது பாடல் ஏஆர் ரஹ்மன் குரலில் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜெயமோகன் எழுத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் நடிகர் சிம்பு, சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார், சித்திக் முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அடுத்த மாதம் செப்டம்பரில் வெளிவர இருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

image

”மறக்குமா நெஞ்சம் மனசெல்லாம் சலனம்” என்று தொடங்கும் இந்த பாடலை பாடாலிசிரியர் தாமரை எழுதி இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பாடியுள்ளார். ஏற்கனவே ”பொன்னி நதி பாக்கனுமே” என்னும் பாடல் ஏஆர் ரஹ்மான் குரலில் வெளிவந்து எல்லோருடைய வரவேற்பையும் பெற்றுள்ள நிலையில், இந்த பாடலும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

image

இந்த பாடலில் வரும் வரிகளை வைத்து, “மறக்குமா நெஞ்சம் இந்த பாடலை என்றும், இதுபோல போதை உண்டா எங்கும்.!? என்றும்” கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/RYbnT3Z
via IFTTT

Post a Comment

0 Comments