அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.7 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமார் அளித்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் இல்லத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு 3.7 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அமல்ராஜ் குறித்து தனிப்படை போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments