399 ரூபாயில் பத்து லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீட்டுத் திட்டத்தை தபால் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியானது டாடா ஏஐஜி, ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதில் 18 முதல் 65 வயதுள்ளவர்கள் சேரலாம். தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர் மூலம் விரல் ரேகையை பதிவு செய்து 399 ரூபாய் செலுத்தி 5 நிமிடங்களில் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு உடல் பாதிப்பு, பகுதி உடல் பாதிப்பு, பக்கவாதம் ஏற்பட்டால் ரூ.10 லட்சம், விபத்தினால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.60 ஆயிரம், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம்), விபத்தினால் மரணம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்விச் செலவுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.
விபத்து காப்பீடு திட்டத்தில் இணைவதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நலம் பாதிப்பு, உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்யலாம் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/weUTshv
via IFTTT
0 Comments