மதுரை: அமைச்சர் கார் மீது காலணி வீச்சு – பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த 3 பெண்கள் கைது

LATEST NEWS

500/recent/ticker-posts

மதுரை: அமைச்சர் கார் மீது காலணி வீச்சு – பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த 3 பெண்கள் கைது

அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் 3 பெண்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரை விமான நிலையத்தில் சமீபத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் அவனியாபுரம் காவல்துறையால் 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

image

இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த சரண்யா , தனலெட்சுமி மற்றும் தெய்வானை ஆகிய 3 பேரை தனிப்படை காவல் துறையினர் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments