தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த 19 பேர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு சாமி கும்பிட லோடு ஆட்டோவில் சென்றுள்ளனர்.
கோவில்பட்டி அருகே சிப்பிபாறை பகுதியில் வந்த போது மார்த்தாண்டத்தில் இருந்து திருவேங்கடம் நோக்கி வந்த டிப்பர் லாரி - லோடு ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதில் லோடு ஆட்டோவில் வந்த ராஜதுரை என்பவரது 8 மாத ஆண் குழந்தை கபிலேஸ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறது.
மேலும், லோடு ஆட்டோ டிரைவர் சுந்தரமூர்த்தி (37), முத்துசெல்வி (38), ஈஸ்வரன் (39), தினேஷ் (16), ரமேஷ் (29), வீரமணி (22), ராணி (39), விசுவாதினி(15), முகேஸ் பிரியா (23), கிருஷ்ணா லிலாவதி(28), மதுரேசன்(2), முக்தா ஸ்ரீ(6), சிவா (18), பரமசிவன் (40), மாணிக்கம் (38), மனோஜ் (25), இனேஷ்(7), குமார்( 46) ஆகிய 18 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் முகேஸ்பிரியா, கிருஷ்ணா லிலாவதி, மனோஜ், இனேஷ், முக்தா ஸ்ரீ, மதுரேசன், ராணி ஆகிய 7 பேர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் கிருஷ்ணா லீலாவதி உயிரிழந்தார். விபத்து குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவர் மார்த்தாண்டத்தைச் சிவராஜ் என்பவரிடம் சேர்ந்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/na6Dxpt
via IFTTT
0 Comments