மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இனிப்பு கடை அதிபரின் பெண் குழந்தையை கடத்திச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி, தேனி உள்ளிட்ட இடங்களில் இனிப்பு கடை நடத்தி வரும் பார்த்தசாரதி - சத்யா தம்பதிக்கு நான்கு வயதில் ஜனனி என்ற குழந்தை உள்ளது. விடுமுறை தினம் என்பதால் பாட்டி வீட்டில் விடப்பட்டிருந்த இந்த குழந்தையை, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச் சென்றனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சிலாம்பட்டியைச் சேர்ந்த ஒரு தம்பதியை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்தது கடத்தப்பட்ட குழந்தை ஜனனி என்பதை கண்டறிந்த உசிலம்பட்டி காவல்துறையினர் தம்பதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: குற்றவழக்கு விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை – நீதிமன்றம் வேதனை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments