உலககோப்பையில் ஆடினாலும் அவரால் விக்கெட்டுகள் எடுக்க முடியாது என்று இந்திய வீரர் ஜடேஜா குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ஜடேஜா நடக்கவிருக்கும் டி20 உலககோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணியில் இடம்பிடித்து இருந்தாலும் அவரால் அதிக விக்கெட்டுகளை எடுக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”கண்ணாடி என்றும் பொய் சொல்லாது என்று கூறியுள்ள அவர், 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார், அவருடைய பவுலிங் சராசரி 43 க்கு மேல் உள்ளது மற்றும் ஓவர் எகானமியும் 8.5 ஆக உள்ளது" என்று விளக்கியுள்ளார்.
இதற்கு முன்பு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சன்ஜய் மஞ்ச்ரேக்கர், இந்திய அணியில் ஜடேஜா விளையாட வேண்டும் என்றால் அவர் அவருடைய பேட்டிங்கை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஆகாஷ் சோப்ராவும் இப்படி தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/g7VZDMS
via IFTTT
0 Comments