ஒடுகத்தூர் அருகே ஹோமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த டி.சி.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (42). இவர் ஹோமியோபதி படித்துவிட்டு அப்பகுதியில் சிறிய கிளீனிக் வைத்து மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த அணைக்கட்டு உதவி மருத்துவர் ஜெயந்த் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் ஆய்வாளர் உலகநாதன், வருவாய் மற்றும் மருத்துவக் குழுவினருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது நரசிம்மன் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்து. இதனையடுத்து போலி மருத்துவர் நரசிம்மனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments