கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் அஜித்குமார் என்ற கூல் (27) மற்றும் கேசவன் என்பவரது மகன் லெக்குசாமி என்ற காத்தாடி (29) ஆகிய இருவரும் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்திருந்தார்.
இந்த நிலையில் அஜித்குமார் என்ற கூல் (27) மற்றும் லெக்குசாமி என்ற காத்தாடி (29) ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments