தைவானை தங்களது நாட்டின் ஒருபகுதியாக சீனா கருதிவரும் நிலையில், ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் நிறுவனம் அதனை தனி நாடாக விளம்பரப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தீவு பகுதியான தைவானை தங்களது நாட்டு எல்லைக்கு உட்பட்ட பகுதியாக சீனா கூறிவருகிறது. ஆனால் தைவான் தன்னை சுதந்திர தனி நாடாக கூறி வருகிறது. இதனால் தைவான் தனி நாடா அல்லது சீன எல்லைக்குட்பட்டதா என்பது விவாதப்பொருளாக இருந்துவரும் நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் நிறுவனம் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு விளம்பர வீடியோவில் தைவான் ஒரு தனி நாடாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது, தங்களது ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் தென் கொரியா, மலேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலும் கிடைக்கும் என்று அந்த விளம்பரத்தில் வாசகம் இடம்பெற்றிருந்தது.
தைவானை தங்களது நாட்டின் ஒருபகுதியாக சீனா கருதிவரும் நிலையில், ஸ்னிக்கர்ஸ் சாக்லேட் நிறுவனம் அதனை தனி நாடாக விளம்பரப்படுத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு சீன நாட்டு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து தைவானை தனி நாடாக விளம்பரப்படுத்தியது தொடர்பாக ஸ்னிக்கர்ஸ் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, சீனாவின் எச்சரிக்கையை மீறி தைவானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் கடும் அதிருப்தியில் இருக்கிறது சீனா. இச்சூழலில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையில் அமெரிக்க நாட்டு நிறுவனமான ஸ்னிக்கர்ஸ் இறங்கியது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இதையும் படிக்க: ’அந்த ஒரு விளம்பரம்’’ - வெளியான உடனே பெண்கள் விளம்பரங்களில் தோன்ற தடைவிதித்த ஈரான் அரசு!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/57K1Sbu
via IFTTT
0 Comments