ஓட்டப்பிடாரம் அருகே கோவில் திருவிழாவில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பாம்பு வித்தை காட்டியதாக பாம்பட்டி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள எஸ்.குமாரபுரம் கிராமத்தில் கடந்த மாதம் 7ஆம் தேதி காளியம்மன் கோயில் கொடை விழா நடந்தது. கொடை விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் பாம்பு பிடி வீரர் நல்ல பாம்பை வைத்து வித்தை காட்டினார்.
அப்போது அதை செல்போனில் வீடியோ எடுத்த நபர், சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அது வைரலானது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக்தோமர் நல்ல பாம்பை வைத்து வித்தை காட்டிய நபர் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி தூத்துக்குடி வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் ஓட்டப்பிடாரம் வனவர் மகேஷ், வனக்காப்பாளர் பேச்சிமுத்து, வனக்காவலர் லட்சுமணன் ஆகியோர் பாம்பு வித்தை காட்டிய மதுரை ஆளவந்தன் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமாரை (46) கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பாம்புகளை மீட்டு காட்டுப் பகுதியில் விடப்போவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments