விராட் கோலியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்துவரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் சாஹித் அஃப்ரிடி, கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த விராட் கோலி சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் இன்று வரை சதம் அடிக்கவில்லை. இதன் காரணமாக விராட் கோலியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்துவரும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் சாஹித் அஃப்ரிடி, கோலிக்கு ஆதரவாக கருத்துக்களை கூறியுள்ளார்.
அஃப்ரிடியிடம் ரசிகர் ஒருவர் தற்போது மோசமான ஃபார்ம் காரணமாக திணறிவரும் விராட் கோலியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த அஃப்ரிடி, “அது அவருடைய கையில்தான் உள்ளது, நிச்சயம் கடினமான நேரங்கள்தான் நல்ல வீரரை கண்டுபிடிப்பதற்கு உதவும்” என்றும் தெரிவித்திருந்தார்.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கிவரும் நிலையில், விராட் கோலி இந்த தொடரிலாவது தன்னுடைய இழந்த ஃபார்மை மீட்டெடுப்பாரா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: யுஸ்வேந்திர சாஹல் உடன் விவாகரத்தா? - மவுனம் கலைத்த தனஸ்ரீ
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/upQvWkF
via IFTTT
0 Comments