லைஃப் ஹேக், DIY டிப்ஸ் தொடர்பான பல விதமான வீடியோக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பார்த்திருப்பீர்கள். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு டெலிவரி ஊழியர் கொடுத்த ஃபினான்சியல் ஹாக் குறித்த வீடியோதான் டிக் டாக் தளத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
நம்ம ஊர் ஸ்விக்கி, ஸொமேட்டோவை போல அமெரிக்காவின் பிரபலமான டெலிவரி சேவையை கொண்டது டோர் டாஷ். ஆஃபர்களை அள்ளிக்கொடுப்பதில் கெட்டி. ஆனால் அந்த ஆஃபர்கள் பெரும்பாலும் டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு கிடைக்குமா என்றால் கேள்விக் குறிதான்.
ஆனால் சிமன் ஃப்ரசெர் என்ற டோர் டாஷ் டெலிவரி ஊழியர் செய்த செயல்தான் காண்போரை வியக்க வைத்திருக்கிறது. அதாவது தனது வீட்டுக்கு கீழே இருக்கக் கூடிய உணவகத்தில் டோர் டாஷ் செயலி மூலம் இலவச டெலிவரி ஆஃபரை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்திருக்கிறார்.
உடனே, டோர் டாஷ் டெலிவரி அக்கவுண்டில் லாக் இன் செய்து தன்னுடைய ஆர்டரை டெலிவரி செய்வதை தானே ஏற்றுக் கொண்டதோடு, கீழே சென்று உணவை பெற்றுக் கொண்டிருக்கிறார் சிமன்.
தற்போது தன்னுடைய ஃபுட் ஆர்டரை டெலிவரி செய்வதற்கான பணமும் தனக்கு வந்ததோடு, இலவச டெலிவரியுடன் உணவும் கிடைத்ததாகவும் சிமன் தன்னுடைய டிக்டாக் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.
இந்த வீடியோ கிட்டத்தட்ட இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்க வைத்ததொடு, பலரும் சிமன் ஃப்ரசெரின் சூப்பர் லைஃப் ஹாக்கிற்கு அட போடவும் செய்திருக்கிறார்கள்.
அதில், “டிக்டாக்கில் சொல்லப்படும் பல நிதி சார்ந்த அட்வைஸ்களை விட இது 99.9 சதவிகிதம் சிறப்பாக இருக்கிறது” என்றும், “இப்படியெல்லாம் ஸ்டண்ட் செய்வதற்கு நேரடியாகவே போய் வாங்கியிருந்தாலே விலை கம்மியாகத்தானே இருந்திருக்கும்” என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/1S2OQGb
via IFTTT
0 Comments