ஓமலூர்: கழிவு வெள்ளை சக்கரை கொண்டு கலப்பட வெல்லம் தயாரிப்பு! 300 மூட்டைகள் பறிமுதல்!

LATEST NEWS

500/recent/ticker-posts

ஓமலூர்: கழிவு வெள்ளை சக்கரை கொண்டு கலப்பட வெல்லம் தயாரிப்பு! 300 மூட்டைகள் பறிமுதல்!

ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமத்தில் கலப்பட வெல்லம் தயாரிக்க கொண்டுவந்த கழிவு வெள்ளை சக்கரையை லாரியுடன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஒரே மாதத்தில் 13.50 லட்ச ரூபாய் மதிப்பிலான வெள்ளை சர்க்கரையை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஒருசில ஆலைகளில் கழிவு வெள்ளை சர்க்கரையை கலந்து பாவு காய்ச்சி வெல்லம் தயாரிக்கப்படுகிறது. அதற்காக கர்நாடகா பகுதிகளில் இருந்து கழிவு சர்க்கரையை இரவு நேரங்களில் கொண்டுவந்து ஆலைகளுக்கு விநியோகம் செய்யபடுவதாக, உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

image

இதையடுத்து சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் காமலாபுரம் பகுதியில் கண்காணித்தனர். அப்போது கர்நாடகா பதிவெண் கொண்ட லாரி, வெள்ளை சர்க்கரை மூட்டைகளை ஏற்றுக்கொண்டு ஊருக்குள் நுழைவதை கண்டறிந்தனர். காமலாபுரம் பகுதியில் உள்ள கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான கடையில் சர்க்கரை மூட்டைகள் இறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அந்த லாரியை மடக்கி பிடித்தனர். பின்னர் 50 கிலோ எடை கொண்ட 300 மூட்டை சர்க்கரையை பறிமுதல் செய்தனர்.

image

பின்னர் நடத்திய விசாரணையில் செவ்வாய்பேட்டையில் உள்ள ஓம் சக்தி ட்ரேடர்ஸ் பெயரில் பில்கள் இருப்பது தெரியவந்தது. லாரி உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட 15 ஆயிரம் கிலோ வெள்ளை சர்க்கரை மூட்டைகளின் மதிப்பு 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஆகும். வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக சர்க்கரையை விநியோகம் செய்ததற்காக இதே வணிகர் மீது ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

image

மேலும், இதே மாதத்தில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 36 ஆயிரத்து 850 கிலோ வெள்ளை சர்க்கரை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இங்குள்ள ஆலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வெல்ல அலைகளில், வெள்ளை சர்க்கரை மற்றும் ரசாயனங்கள் கலந்து வெல்லம் தயாரிப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments