கோவை அரசு மதுபான பாரில் குண்டு வைத்துள்ளதாக அரசர போலீஸ் உதவி எண் 100-க்கு போன் செய்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பீர்முகமது. இவர், மதுகுடிக்க பணம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களுடன் அடிக்கடி பிரச்னைகள் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இவர் கோவையின் பல்வேறு இடங்களிலும் சென்னை தலைமைச் செயலகம் உட்பட முக்கிய இடங்களிலும் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு போன்செய்து தகவல் தெரிவிப்பதும், காவல்துறையும் அவரை கைது செய்து சிறையில் அடைப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் பல்வேறு காவல் நிலையங்களில் பீர்முகமது மீது வழக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபான கடையில் ஓசியில் மதுபாட்டில் கேட்டுள்ளார். மதுபான பாரில் வேலை பார்பவர்கள் ஓசியில் மதுபாட்டில் தரமுடியாது என்று விரட்டியடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பீர்முகமது தனது வழக்கமான பாணியில் போலீஸ் அவசர உதவி எண் 100-க்கு போன்செய்து அந்த மதுபான பாரில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போத்தனூர் போலீசார், போதையில் தூங்கிக் கொண்டிருந்த பீர்முகமதுவை கைது செய்து போத்தனூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர் .
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments