வித்தியாசமான, விநோதமான வழிகளில் சாதனை புரிந்தவர்கள் பற்றியும் உலக சாதனை பட்டியலில் இடம்பெற்றவர்கள் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். சில சாதனைகளெல்லாம் ஒவ்வொருவரின் தனித்திறமையும் கொண்டிருக்கும். அது உடல் சார்ந்த கட்டமைப்பாகவோ, அறிவியல் ரீதியான சாதனைகளாகவோ இருக்கும்.
அதே வேளையில் நூதனமான, விசித்திரமான செயல்களை புரிந்தும் உலக சாதனை பட்டியலில் இடம்பெற்று வருவதும் வாடிக்கையாகி வருகிறது. அப்படியானவர்களை கின்னஸ் நிர்வாகமும் அங்கீகரித்து உலகுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், டி-ஷர்ட்டை மடித்தே கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் டேவிட் ரஷ் என்ற நபர். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த டேவிட் ரஷ் STEM (Science, Technology Engineering, and Mathematics) என்பதை ஊக்குவிக்கும் விதமாக பல சாதனைகளை புரிந்தும், முறியடித்தும் வருகிறார்.
அதன்படி ஒரு நிமிடத்திற்குள் எத்தனை டி-ஷர்ட்களை மடிக்க முடியும் என்பதை செய்துக் காட்டி அதில் உலக சாதனை படைத்திருக்கிறார் டேவிட் ரஷ். அதில் ஒரு நிமிடத்திற்குள் 31 டி-ஷர்ட்களை மடித்து சாதனை புரிந்ததோடு, இதற்கு முன் 23 டி-ஷர்ட்களை மடித்து காட்டிய அவரது சாதனையே டேவிட் முறியடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவலாக இருக்கிறது.
முன்னதாக டேவிட் ரஷ் 250 கின்னஸ் உலக சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்திருக்கிறார். அதில் மாரத்தான் போட்டிகளில் பாதி வழியில் போய்க் கொண்டிருக்கும் போது 111 டி-ஷர்ட்களை அணிவது, தாடையில் கிட்டாரை வைத்தபடியே மாரத்தான் ஓடுவது, வாயில் வைத்துக் கொண்டு 150 மெழுகுவர்த்திகளை வெகு நேரத்திற்கு ஏற்றுவது என பல நூதனமான சாதனைகளை படைத்திருக்கிறார் டேவிட்.
இதுபோக 16 நொடிகளில் 5 டி-ஷர்ட்களை கொடியில் தொங்க விட்டும் சாதனை பட்டியலில் டேவிட் இடம்பெற்றிருக்கிறார். இப்படியாக வெறும் டி-ஷர்ட்டை வைத்தே பல சாதனைகளை படைத்திருக்கிறார். டேவிட் ரஷ் புரியும் பல அசாத்தியமான செயல்பாடுகளை அவரது யூடியூப் பக்கத்திலேயே பகிர்வதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/4BCiRtY
via IFTTT
0 Comments