கொரோனா, ஓமிக்ரான் ஆகிய வைரஸ் பாதிப்புகளிலிருந்து தற்போதுதான் அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில், புதிதாக ரூபெல்லா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது புனே சுகாதாரத்துறை.
கொரோனா நோய் தொற்றின் தாக்கம் 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் இருந்து கிட்டதட்ட இரண்டு வருடங்களுக்கு உலகையே அச்சுறுத்தியது. கிட்டதட்ட மூன்று அலைகளை கடந்து பல நாடுகளை சோதித்தது. பல உயிர்களை பலி கொண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகம் பாதித்த மாநிலமாக இருந்தது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், இரண்டு குழந்தைகளுக்கு இந்த ஆண்டின் முதல் ரூபெல்லா பாதிப்பு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தைகளில் ஒருவர் கோத்ருட் பகுதியைச் சேர்ந்தவர், மற்றொருவர் காரடி பகுதியைச் சேர்ந்தவர். கோத்ருட் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தடுப்பூசி எடுத்துக் கொண்டாரா இல்லையா என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை. காரடியைச் சேர்ந்த 11 மாத குழந்தைக்கு - MR (தட்டம்மை-ரூபெல்லா) தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரூபெல்லா என்பது ஒரு தொற்று வைரஸ். அதன் தனித்துவமான சிவப்பு சொறி (rash) மூலம் அறியப்படுகிறது. ரூபெல்லா மற்றும் தட்டம்மை காய்ச்சல், சொறி உட்பட சில பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளன. ரூபெல்லா தொற்று பெரும்பாலான மக்களில் சிலருக்கு லேசான அறிகுறிகள் அல்லது சிலருக்கு அறிகுறிகளே ஏற்படுத்தாமல் இருக்கலாம். இருப்பினும், கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் பாதிப்பு ஏற்பட்டால், சிசுவுக்கு இது கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும். தடுப்பூசி போடப்பட்டவர்களுக்குக் கூட தட்டம்மை தொற்று ஏற்படலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இது லேசான பாதிப்பையே ஏற்படுத்துகிறது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாதிக்கப்பட்டால், குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் விளைவுகள் கடுமையாக இருக்கும். சிஆர்எஸ் கண்கள், மூளை மற்றும் இதயத்தில் கடுமையான தாக்கத்தை உட்படுத்துவதுடன் கருக்கலைப்புக்குக் கூட வழிவகுக்கும் எனக் குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தடுப்பூசி 90% க்கும் அதிகமான செயல்திறன் கொண்டவை எனவும் ஒன்பது மாதங்கள் முதல் ஐந்து வயது வரை உள்ளவர்களுக்கு இவை அதிகம் காணப்படுகிறதெனவும் அறியப்பட்டுள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளதாக புனே மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அருணா ஆறுச்சாமி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/acYZpHX
via IFTTT
0 Comments