நிலப்பிரச்சனையால் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மீது தாக்குதல் - ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்

LATEST NEWS

500/recent/ticker-posts

நிலப்பிரச்சனையால் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மீது தாக்குதல் - ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே நிலப்பிரச்சினை தொடர்பாக 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தனப்பள்ளியை அடுத்த அகரம் முருகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (34). இவர் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது தந்தையிடம் நிலம் வாங்கி வீடு கட்டி வருகிறார். இதில், சிலம்பரசன் தரப்புக்கும், ரமேஷ் தரப்புக்கும் நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில்  புகாரும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிலம்பரசன் தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே இருந்தார். அவருடைய மனைவி தனலட்சுமி, தம்பி மனைவி அனிதா ஆகியோரும் இருந்துள்ளனர்.

அங்கு வந்த ரமேஷ் தரப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் சிலம்பரசனிடம் தகராறு செய்துள்ளனர். வீட்டின் முன் போடப்பட்டு இருந்த கேட்டை  அடித்து நொறுக்கினர். அங்கிருந்தவர்களை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சிலம்பரசனின் மனைவி தனலட்சுமி மற்றும் தம்பி மனைவி அனிதா, 2 வயது குழந்தை ஆகியோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் 2 வயது குழந்தை உள்பட 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments