`ச்ச... என்னா மனுஷன்யா’- அப்டேட்களைத் வாரி வழங்கிய தளபதி 67 படக்குழு! குஷியில் ரசிகர்கள்!

LATEST NEWS

500/recent/ticker-posts

`ச்ச... என்னா மனுஷன்யா’- அப்டேட்களைத் வாரி வழங்கிய தளபதி 67 படக்குழு! குஷியில் ரசிகர்கள்!

நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இன்று ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டது. அதில், பெரிய நடிகர் பட்டாளங்களையே அறிவித்துள்ளது படக்குழு. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இன்று வெளியாகியுள்ள அப்டேட்களை  மட்டும், இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

'வாரிசு' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’தளபதி 67’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இம்மூவரும் 2வது முறையாகக் கூட்டணி அமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

அதேநேரத்தில், ‘தளபதி 67’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை (ஜனவரி 30) வெளியானது. ’விஜய் அண்ணாவுடன் மீண்டும் இணைகிறேன்’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜும், ’தளபதி விஜய்யுடன் மீண்டும் தளபதி 67ல் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது’ என செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, ரசிகர்கள் மத்தியில் இப்பதிவுகள் வைரலாகின.

அத்துடன், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்களை படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர். அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர் எனவும் தெரிவித்தது.

image

இந்த நிலையில், காஷ்மீரில் நடைக்கும் இரண்டாவதுகட்ட படப்பிடிப்புக்காக ‘தளபதி 67’ படக்குழுவினர் இன்று (ஜனவரி 31) காலை தனி விமானத்தில் சென்றுள்ளனர். இதனை படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் விமான டிக்கெட்டுடன் பகிர்ந்து இருந்தார். அத்துடன், ‘தளபதி 67’ படத்தில் இணைந்து பணியாற்றும் நடிகர்களையும் படத் தயாரிப்பு நிறுவனம், இன்று அடுத்தடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இளம் நடிகர் மேத்யூ தாமஸ், பழைய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் பெயர்களை அடுத்தடுத்து வெளியிட்ட பட நிறுவனம், இறுதியாக இயக்குநர் மற்றும் நடிகர்களான கெளதம் வாசுதேவ மேனன், அர்ஜுன் ஆகியோர் பெயர்களை வெளியிட்டு, ‘இத்துடன் இன்றைய ‘தளபதி 67’ அப்டேட்ஸ் முடிவு அடைகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

'தளபதி 67’ படத்தில் இணைந்தது குறித்து சஞ்சய் தத், “படத்தின் ஒன்லைன் கேட்டபோதே, இந்தப் படத்தின் ஒரு பகுதியாக நானும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதற்குச் சரியான தருணம் இதுதான் என்று தோன்றியது. தளபதி 67 பயணம் குறித்து மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

image

நடிகை பிரியா ஆனந்த், "தளபதி 67 படத்தில் நடிப்பது த்ரில்லாக உள்ளது. ஒரு அற்புதமான படக்குழுவினருடன் பணிபுரிவதை எதிர்நோக்கி உள்ளேன்" எனவும், நடன இயக்குநர் சாண்டி, “இது ஒரு ஸ்பெஷல் ஃபீலிங். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தில் நான் நடிப்பது எனக்கே ஒரு புது அனுபவமாக உள்ளது. தளபதி விஜய் சார் உடன் நடிக்க உள்ளதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” எனவும் கூறியிருப்பதாகப் படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் இயக்குநர் மிஷ்கின், “21 வருடங்களுக்கு முன் விஜய் நடித்த படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தேன். இத்தனை வருடங்களில் ஒரு விஷயம் மாறாமல் உள்ளது. அது விஜய்க்கும் எனக்கும் உள்ள பிணைப்பு.

இந்த பிணைப்புடன் லோகேஷ் கனகராஜூக்கு என் மீதும் எனக்கு அவர் மீதும் உள்ள பரஸ்பர அன்பும் மரியாதையும் என்னை ஆர்வம் கொள்ளச் செய்கிறது. தளபதி 67 படத்தினை உங்களோடு தியேட்டரில் காண ஆர்வமாக உள்ளேன்" என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்.

image

நடிகர் மன்சூர் அலிகான், “யாணும் இணைந்தேன். தளபதி 67இல் லோகேஷ் நீ ஆர்ப்பரித்து எழு; திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே” என அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளார். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், “இந்த நேரத்தில் கேமரா முன் மற்றும் திரைத்துறையில் கைதேர்ந்தவர்களுடன் தோள்சேர்ந்து நிற்கிறேன்.

தளபதி 67ல் தானும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி” எனவும், இயக்குநரும் நடிகருமான அர்ஜுன், ”ஒரு அற்புதமான கேப்டனால் (லோகேஷ் கனகராஜ்) வழிநடத்தப்படும் கப்பலில் ஏறுகிறேன்” எனவும் அந்த போஸ்டர்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அப்டேட் மழையை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம், “இத்துடன் இன்றைய தளபதி 67 அப்டேட்ஸ் முடிவடைகிறது! நாளை சந்திப்போம்” எனக்குறிப்பிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை நடிகை த்ரிஷா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் படத்திலிருப்பது பற்றிய அப்டேட்ஸ் வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த தொடர் அறிவுப்புகளால் ரசிகர்கள் விஜய் உற்சாகத்தில் உள்ளனர்.

ஒரு ரசிகை, “இன்னைக்கு அறிவிச்சவங்களாம், படத்தில் ஒரு தரப்பு போல” என்றுள்ளார். இன்னொருவர், “நாங்க வெயிட் பண்ணுவோம்னு தெரிஞ்சு, இன்னைக்கு அப்டேட் முடிஞ்சிருச்சுனு சொல்றீங்க பாத்தீங்களா... அண்ணா, நீங்க எங்க ஆளு அண்ணா” என்றுள்ளார். இன்னொருவரோ “என்னா மனுஷன்யா” என போட்டுள்ளார்.

தொடர்ந்து பலரும் த்ரிஷா பற்றிய அறிவிப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/gCn5mtS
via IFTTT

Post a Comment

0 Comments