சிவராத்திரியையொட்டி கோயிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் சாலை விபத்தில் பலி

LATEST NEWS

500/recent/ticker-posts

சிவராத்திரியையொட்டி கோயிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் சாலை விபத்தில் பலி

ஆந்திர மாநிலத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆடங்கி காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருந்தவர் சமாந்தர். இவர் சிவராத்திரியை முன்னிட்டு தனது மனைவி, மகள் மற்றும் இரண்டு பேருடன் காரில் சின்னகஞ்சம் நகரில் இருக்கும் சிவன் கோயிலுக்கு நேற்று இரவு சென்றுள்ளார். கோயிலுக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை அனைவரும் ஊர் திரும்பியுள்ளனர்.

image

அப்போது அவர்கள் பயணித்த கார் மேதர்மிட்லா அருகே வந்தபோது டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரை தொடர்ந்து பின்னால் வேகமாக வந்த லாரி, கார் மீது மோதி காரில் பயணித்த டிரைவர் உள்ளிட்ட ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

image

தகவல் அறிந்து அங்கு சென்ற ஆடங்கி காவல்நிலைய போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக பாபட்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/or8zdBC
via IFTTT

Post a Comment

0 Comments