கோவையில் மற்றவர்களின் சிம் கார்டை PORT செய்து அதன் மூலம் ஆன்லைனில் க்ரெடிட் கார்டு மற்றும் லோன் அப்ளிகேஷனிலிருந்து பணம் பெற்று மோசடி செய்த பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
கோவையைச் சேர்ந்த வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் மற்றும் ஆனந்த குமார் ஆகியோர் தங்களுடைய தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தங்களுக்கு தெரியாமல் யாரோ PORT செய்து அதன் மூலம் ஆன்லைனில் தனது க்ரெடிட் கார்டு மற்றும் லோன் அப்ளிகேஷனிலிருந்து பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக மாநகர சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சைபர் க்ரைம் காவல்துறையினர் கோவை புதூரைச் சேர்ந்த விக்னேஷ் (31) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விக்னேஷ் தன்னுடன் பழகி வந்த நண்பர்களின் ஆவணங்கள் மற்றும் மொபைல் நம்பர்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து தொலைபேசி எண்களை போர்ட் (PORT) செய்து வங்கி கடன் அட்டை கணக்குகள் மற்றும் ONLINE LOAN APPLICATION மூலம் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து விக்னேஷிடம் இருந்து மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள், பல்வேறு சிம்கார்டுகள், வாகன உரிமங்கள், 3 கார்கள், empty electronic chipset cards ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது போன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments