ஐஃபோன் டெலிவரி செய்ய வந்த ஊழியரை வாக்குவாதத்தின் போது வாடிக்கையாளர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கர்நாடகாவில் அண்மையில் அரங்கேறியது தற்போது அம்பலமாகியிருக்கிறது.
ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஐஃபோன் ஆர்டர் செய்திருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 7ம் தேதி அந்த பார்சலை டெலிவரி செய்த போது அதனை பிரித்து பார்ப்பதில் ஹேமந்த் தத்தா (20) என்ற வாடிக்கையாளர் டெலிவரி பாயான ஹேமந்த் நாயக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த வார்த்தை மோதல் ஒரு கட்டத்தில் தகராறாக உருவெடுக்க டெலிவரி பாய் ஹேமந்த் நாயக்கை (23) வாடிக்கையாளரான ஹேமந்த் தத்தா ஆத்திரத்தில் குத்திக் கொன்றிருக்கிறார். அதோடு விடாமல், அந்த ஹேமந்த் நாயக்கின் உடலை சாக்குப்பையில் கட்டி வைத்திருந்து, பின்னர் அஞ்செகோப்லு என்ற பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்.
இதனையடுத்து தலைமறைவாகியிருக்கிறார் ஹேமந்த் தத்தா. டெலிவரி பாய் ஹேமந்த் நாயக் கொல்லப்பட்டதை அறிந்திடாத அவரது குடும்பத்தினர், அவர் காணாமல் போய்விட்டதாக எண்ணி அர்சிகெரே தாலுக்கா காவல்துறையினர் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
ஹேமந்த் நாயக்கின் சகோதரர் மஞ்சு நாயக் கொடுத்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டையை நடத்தி வந்த போலீசாருக்கு அண்மையில்தான் அஞ்செகோப்லு ரயில்வே ட்ராக் அருகே எரியூட்டப்பட்ட நிலையில் இருந்த ஹேமந்த் நாயக்கின் உடல் கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் ஹேமந்த் தத்தாவின் செயல்கள் அனைத்தும் போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஹேமந்த் தத்தாவை தேடி கண்டுபிடித்து கைது செய்த போலீசார், தற்போது நீதிமன்ற காவலில் அடைத்திருக்கிறார்கள்.
Unable to pay for #iPhone, 20-year-old stabs delivery boy, @sagayrajp brings you more details #ITVideo @PoojaShali pic.twitter.com/pXBExT7IM5
— IndiaToday (@IndiaToday) February 20, 2023
விசாரணையின் போது, 46,000 ரூபாய் மதிப்புள்ள ஐஃபோனை ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்துவிட்டு அதற்கான பணத்தை கொடுக்காமல், டெலிவரி பாய் ஹேமந்த் நாயக்கை வெளியே காத்திருக்க செய்துவிட்டு உள்ளே சென்று பணத்தை எடுத்து வருவதாகச் சொல்லி கத்தியை கொண்டு வந்து வேண்டுமென்றே வாக்குவாதம் செய்து சரமாரியாக தாக்கியதாக கைதான ஹேமந்த் தத்தா கூறியிருக்கிறாராம்.
இதுபோக, கத்தியால் குத்திக் கொன்ற ஹேமந்த் நாயக்கின் உடலை எரியூட்டுவதற்காக டுவீலரில் வைத்து எடுத்துச் சென்று, பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சியையும் போலீசார் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த சிசிடிவி காட்சியை இந்தியா டுடே ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments