திருவள்ளூரில் கடந்த 20 ஆம் தேதி நகை வியாபாரியிடம் 1.4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மற்றொரு நகைக்கடை உரிமையாளர் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார், அவரிகளிடம் இருந்து 1.4 கிலோ தங்கததை மீட்ஷடுள்ளனர்.
சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ராமேஸ்வர லால் என்பரிடம் வேலை பார்க்கும் காலுராம் (35) மற்றும் சோகன் (30), கடந்த 20 ஆம் தேதி தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள நகைக்கடையொன்றில் நகைகளை கொடுத்து பணம் வசூலித்து விட்டு இ-சக்கர வாகனத்தில் செங்குன்றம் நோக்கிச் சென்றுள்ளனர்.
அப்போது காரணிப்பேட்டை என்ற பகுதியில் 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவர்களை வழிமறித்து கத்தியால் வெட்டி விட்டு 1.4 கிலோ தங்க நகைகள் மற்றும் ₹1.12 லட்சம் ரொக்கத்தை பறித்துச் சென்றது. இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் வெங்கல் போலீசார் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் திருவள்ளூர் எஸ்பி சிபாஸ் கல்யாண் நேரில் விசாரணை செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவர்கள் நகை வாங்கிய நகைக்கடை உரிமையாளர் கமல் கிஷோர், மேலும் தமிழ்மணி, பாலாஜி, சுகுமார் மற்றும் கிளிடாஸ் என 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 1.4 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments