ஜியோ கம்பெனியால் அறிமுகம் செய்யப்பட்ட ட்ரூ 5G சேவையானது, நாடு முழுவதிற்கும் கொண்டு சேர்க்கப்படும் வேலை தற்போது வேகம் எடுத்துள்ளது. அந்தவகையில் தற்போது ஜம்மு, காஷ்மீர் பகுதிகளிலும் ஜியோ 5G சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று 12 மாநிலங்களில் கூடுதலாக 25 நகரங்கள் ஜியோவின் 5ஜி சேவையை பெற்றுள்ள நிலையில், ஜியோ 5G சேவை கொண்டு சேர்க்கப்பட்ட இந்திய நகரங்களின் எண்ணிக்கை தற்போது 304ஆக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவானது தங்களது ட்ரூ 5G சேவையானது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள, ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தது. ஜியோவின் அறிவிப்பின் படி செவ்வாய் கிழமையான நேற்று, ஜம்மு காஹ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ஜம்முவில் உள்ள ராஜ் பவனில் இருந்து ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தினார்.
ஜியோ 5G சேவையை அறிமுகம் செய்ததற்கு பிறகு, மனோஜ் சின்ஹா பேசுகையில், "ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிவேக 5ஜி நெட்வொர்க் சேவையானது, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திகொடுக்கும்.
நமது மாண்புமிகு பிரதமரின் டிஜிட்டல் இந்தியா பார்வையை உண்மையாக்குவது நமது அரசாங்கத்தின் நோக்கம். இந்த அதிவேக 5ஜி நெட்வொர்க் சேவை மூலம், மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து துறையினர்களும் பயன்படுத்திகொள்வதோடு, மக்களும் அரசாங்கமும் நிகழ்நேர அடிப்படையில் இணைந்திருக்கவும் பெரிய உதவியாக இருக்கும். யூனியன் பிரதேசத்தில் ஜியோ 5G சேவைகளின் வருகை என்பது, இங்கு அனைத்து அடுத்தக்கட்ட முயற்சிகளுக்கு பெரும் ஊக்கமாக மாறும்" என்று கூறினார்.
இந்நிலையில், ஜியோ TRUE 5G சேவையால் என்னென்ன மாற்றத்தக்க நன்மைகளானது, ஜம்மு காஷ்மீர் நகரங்களில் சுகாதாரம், கல்வி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய துறைகளில் ஏற்படும் என்ற காட்சிப்படமானது. ஒரு முன்னோட்டமாக AR-VR சாதனமான ஜியோ கிளாஸ் மூலம், வெளியீட்டு நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.
அதற்கு பிறகு பேசிய ஜியோ செய்தித் தொடர்பாளர், "ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் ஜியோ ட்ரூ 5ஜியை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டிசம்பர் 2023க்குள், ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு நகரத்திற்கும் ஜியோ ட்ரூ 5ஜி சேவையானது சென்று சேரும். இங்கு 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியதின் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 36,000 பேருக்கு ஜியோ வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு அதிவேக நெட்வொர்க் சேவை துவக்கமானது ஒரு முக்கியமான மைல்கல்லாகும்” என்று பேசினார்.
மேலும், கூடுதலாக நாட்டின் 12 மாநிலங்களில் உள்ள 25 நகரங்களில், ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மேலும் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் ஜியோவின் ட்ரூ 5ஜி சேவைகளின் பலனாது, நாடு முழுவதும் உள்ள 304 நகரங்களுக்குச் சென்றடைந்துள்ளது. ஒவ்வொரு ஜியோ பயன்பாட்டாளரும் 2023ஆம் ஆண்டு முடிவதற்குள், ஜியோ ட்ரூ 5ஜி தொழில்நுட்பத்தின் உருமாறும் பலன்களை அனுபவிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று கூறினார். இந்த நகரங்கள் வரிசையில் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் ஜியோ 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments