கொடுத்த பணத்திற்கு அதிக வட்டி கேட்டு மிரட்டுவதாக கூறி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொம்மை வியாபாரி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அரச்சலூரில், குமார் என்பவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பொம்பை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவர் தொழிலுக்காக சிலரிடம் பணம் பெற்று வட்டியும் கட்டி வந்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி கட்டியும், வட்டி பணம் பாக்கி இருப்பதாக கூறி பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். பணம் கேட்டு மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுப்பதாகவும், தன்னுடைய தம்பி ஏலச்சீட்டு பெற்று தலைமறைவான நிலையில் அந்த பணத்தையும் தன்னையே செலுத்த சொல்லி வற்புறுத்துவதாக கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பொம்மை வியாபாரியான குமார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போலீசார் சோதனை செய்வதை கண்டு நுழைவாயிலில் தான் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை தன்மேல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், குமாரின் மீது தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றி, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments