”இனி ஸ்டேட்டஸ் வைக்கும் போது எச்சரிக்கையா வைங்க..”-வாட்சப்பில் அறிமுகமாகும் புதிய அப்டேட்!

LATEST NEWS

500/recent/ticker-posts

”இனி ஸ்டேட்டஸ் வைக்கும் போது எச்சரிக்கையா வைங்க..”-வாட்சப்பில் அறிமுகமாகும் புதிய அப்டேட்!

வாட்சப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் இனி சென்சிடிவாக இருக்கும்பட்சத்தில், அதனை ரிப்போர்ட் செய்யும் விதமாக புதிய அப்டேட்டை அறிமுகம் செய்யவிருக்கிறது மெட்டா.

ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட்!

மெட்டாவின் மெசேஜ்ஜிங் ஆப் ஆன வாட்ஸ்அப், தற்போது ஒரு புதிய அம்சத்தை வெளியிடவிருக்கிறது. அந்த புதிய அப்டேட்டின் படி, பயன்பாட்டாளர்கள் மற்றவர்களால் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் குறித்து, ஆண்ட்ராய்ட் பீட்டாவிடம் ரிப்போர்ட் செய்ய முடியும். அந்த புகாரானது, நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் குழுவிற்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும்.

Can I read deleted WhatsApp messages?

எது மாதிரியான ஸ்டேட்டஸ்களை எல்லாம் ரிப்போர்ட் செய்யலாம்!

வாட்சப் பீட்டாவானது அவர்களின் சோதனையாளர்கள் குழுவை, வாட்சப்பில் வைக்கப்படும் ஸ்டேட்டஸ்கள் குறித்து அளிக்கப்படும் “ரிப்போர்ட்கள்” பற்றி வேலை செய்வார்கள் என அறிவித்துள்ளது. சேவை மற்றும் விதிமுறைகளை மீறக்கூடிய எந்தவொரு “ஸ்டேட்டஸ்கள்” குறித்தும் பயனர்கள் புகாரளிக்கலாம் என்றும், உங்களை பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியாமல் பகிரப்பட்டாலும் புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட் - சிறப்பம்சம்

இந்த புதிய அப்டேட்டின் சிறப்பம்சமாக, ஸ்டேட்டஸ்கள் மட்டுமல்லாது மெசேஜ்கள், மீடியா, லொகேஷன் ஷேரிங், போன் அழைப்புகள் என அனைத்தும் எண்ட் டூ எண்ட் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்அப், மெட்டா தவிர வேறு யாரும், பயனர்களின் தனிப்பட்ட செய்திகளைப் படிக்கவோ, அவர்களின் தனிப்பட்ட அழைப்புகளைக் கேட்கவோ முடியாது.

image

புதிய அப்டேட்டிற்கு என்ன செய்ய வேண்டும்! எப்போது கிடைக்கும்?

மேலும் இந்த புதிய ” ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட்டானது” பயன்படுத்தும் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கும், ஏனெனில் இது அனைவருக்கும் அவர்களுடைய தளத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. இந்த புதிய அப்டேட் ஆனது தற்போது ப்ளே ஸ்டோரில் வாட்சப்பை அப்டேட் செய்த பிறகு, சில பயன்பாட்டாளர்களுக்கு கிடைத்துள்ளதாகவும், இனி வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் விரைவாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய “ ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் அப்டேட்” குறித்து வேலை செய்துவருவதாக, கடந்த ஜனவரி மாதம் மெட்டா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments