வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை! விலை உயர்வுக்கு இதுதான் காரணமா?!

LATEST NEWS

500/recent/ticker-posts

வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை! விலை உயர்வுக்கு இதுதான் காரணமா?!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இது, வரலாறு காணாத விலை ஏற்றமாக உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி சவரன் 44040 ரூபாய்க்கு விற்பனை ஆன தங்கமானது இன்று ஒரே நாளில் கிடுகிடுவென விலை உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. இன்று 22 கிராட் தங்கமானது கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் விலை உயர்ந்து, ரூபாய் 5560 க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 880 விலை உயர்ந்து ரூபாய் 44480க்கு விற்பனை ஆகிறது. இது இதுவரை இல்லாத விலையேற்றம். 

image

விலை உயர்வுக்கு காரணம் என்ன?

”தங்கமானது கடந்த பத்து நாட்களில் விலை ஏற்றம் கண்டு வருகிறது. இதற்கு காரணம் என்ன என்று பார்த்தால், அமெரிக்காவின் மைய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்தியதன் விளைவாக இரண்டு பெரிய வங்கிகள் திவாலாகி விட்டது. இதனால், அமெரிக்கப் பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

முதலீட்டாளர்களை பொறுத்த வரையில் தனது முதலீடானது பாதுகாப்பானதாக இருப்பதை தான் விரும்புவார்கள். அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்வதின் தன் எதிரொலியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் ரூபாயின் மதிப்பானது வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனாலும் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/CuVOQ3i
via IFTTT

Post a Comment

0 Comments