“பைக்ல ஸ்பீடா போய் வீடியோ போட்டு பிரபலம் ஆகனும்”- Reels'காக இளைஞர்கள் செய்த செயல்

LATEST NEWS

500/recent/ticker-posts

“பைக்ல ஸ்பீடா போய் வீடியோ போட்டு பிரபலம் ஆகனும்”- Reels'காக இளைஞர்கள் செய்த செயல்

இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-ட்யூப் ரீல்ஸ் ஆகியவற்றில் வீடியோ போட்டு பிரபலம் ஆவதற்காக, அதிவேக இருசக்கர வாகனங்கள் மற்றும் அதிக விலை உயர்ந்த வாகனங்களை திருடியதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் வேளச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன், வேலை முடித்துவிட்டு வீட்டின் வாசலில் தனது விலை உயர்ந்த பைக்கை நிறுத்தி வைத்திருந்ததாகவும், மீண்டும் மறுநாள் காலை பைக்கை எடுக்க வந்தபோது திருடு போய்விட்டதாக புகார் அளித்திருந்தார். இதேபோன்று பல இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

image

இந்நிலையில் கீழ்பாக்கம் உதவி ஆணையர் தலைமையில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை முடக்கிவிடப்பட்டது. இதேபோன்று விலை உயர்ந்த பைக்குகள், அதிவேகமாக செல்லும் பைக்குகள் திருடு போன அனைத்து வழக்குகள் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் ஓட்டேரியை சேர்ந்த பாலா என்கிற பாலமுருகன், சூளை பகுதியைச் சேர்ந்த சோமேஷ் ஆகிய இருவரும் பைக் திருட்டில் ஈடுபட்டுவந்தது தெரிய வந்தது. இவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

image

மேலும் விசாரணை மேற்கொண்டதில், youtube மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆகிய வீடியோக்களில் அதிவேகமாக செல்லும் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி, பலரும் அதிக லைக்குகள் வாங்குவதாகவும், இதனால் தாங்களும் அதேபோன்று வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆவதற்காக, அதி வேகமாக செல்லும் இருச்சக்கர வாகனங்களை திருடி சாகசம் செய்து ஓட்டி வீடியோ பதிவிட்டு வெளியிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

image

பாலா மற்றும் சோமேஷிடம் திருட்டு வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வரும் நண்பர்கள் குறித்தும் போலீசார் பட்டியலெடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு உடந்தையாக வேறு யாரேனும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்தில் அவர்களின் நண்பர்கள் 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments