ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்தப் போட்டியில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இந்தியா தோல்வியடைந்த இரவில் என்ன நடந்தது ? என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதை குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வினுடைய யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீதர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் "முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்த நாளில் இரவு 12.30 மணிக்கு விராட் கோலியிடமிருந்து மெசேஜ் வந்தது. 'என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்' எனக் கேட்டார். நான் அதிர்ச்சியாகி 'ரவி சாஸ்திரி, பரத் அருண், விக்ரம் ரத்தோர் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம் என பதிலளித்தேன். அதற்கு கோலி நானும் வருகிறேன்" என்றார்.
மேலும் தொடர்ந்த ஸ்ரீதர் "சிறிது நேரத்தில் விராட் கோலியும் வந்தார். அப்போது ரவி சாஸ்திரி இந்தியா வெற்றிப்பாதைக்கு திரும்புவது குறித்த ஆலோசனைகளை சொன்னார். இந்தத் தோல்வியை வெற்றியாக மாற்ற வேண்டுமென்றால் வீரர்கள் அனைவரும் 36 எண் பொறித்த பேட்ஜை அணிய வேண்டும். அது உத்வேகம் தரும் என பேசினார் ரவி சாஸ்திரி. இது எங்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. பின்பு பலகட்ட ஆலோசனைகள் கடந்து சென்றது அந்த இரவு" என்றார்.
மேலும் பேசிய அவர் "பின்பு மறுநாள் காலை ரஹானேவை அழைத்து சிறப்பான திட்டங்கள் வெற்றி வியூகங்கள் குறித்து பேசினார் விராட் கோலி. அந்தத் தருணம் அற்புதமாக இருந்தது. பொதுவாக அடுத்தப்போட்டியில் பேட்டிங்கை பலப்படுத்துவோம். ஆனால் நாங்கள் பவுலிங்கை பலப்படுத்தி ஜடேஜாவை அணிக்குள் கொண்டு வந்தோம். அது அற்புதமான பலனை தந்தது" என்றார் ஸ்ரீதர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qMvlan
via IFTTT
0 Comments