யாரிடமும் ஆதரவு கேட்கும் நிலையில் பாஜக இல்லை என குஷ்பு தெரிவித்தார்
மதுரை தெப்பகுளம் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பாஜகவின் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,
’’பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. பாஜக எங்கே இருக்கிறது என கேட்ட நிலையில் தற்போது ஒவ்வொரு தெருக்களிலும் பாஜக கொடி பறக்கிறது. சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும். ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடத் தயார். கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி பெண்கள் குறித்து இழிவாக பேசியது கேவலமானது. கமல் அறிவித்த பெண்களுக்கான அறிவிப்பை நான் வரவேற்கிறேன். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களாகவோ எந்த கட்சியாகவோ இருந்தாலும் தண்டனை அளிக்க வேண்டும்.
திரையரங்குகளில் 50% அனுமதி என்ற அறிவிப்பால் அரசுக்கு எதிராக ரசிகர்கள் பேசத்தான் செய்வார்கள். விதிகளின்படிதான் திரையரங்குகளில் 50% மட்டுமே இடங்களுக்கான அனுமதி வழங்கப்படும். ரஜினி யாருக்கு ஆதரவு தர வேண்டும் என்பது எனக்கு தேவையில்லை, யாரிடமும் பாஜகவிற்கு ஆதரவு கேட்க வேண்டிய நிலை இல்லை. எதிர்க்கட்சிகள் பெண்களின் பாதுகாப்பு பற்றியோ ஊழல் பற்றியோ பேச அருகதையில்லை.
திமுகவில் நான் தொண்டராக இருந்தபோது எனது வீட்டில் கல் எறிந்தது குறித்து பேச முயன்றபோது கண்டுகொள்ளாத ஸ்டாலின், தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார்? பெண்களுக்கு இந்த தேர்தலில் அதிக வாய்ப்புகள் தர வேண்டும் என மோடி விரும்புகிறார்.
திருமாவளவன் பிரபலத்திற்காக இந்து கடவுள்கள் குறித்து ஏதாவது சர்ச்சையாக பேசிவருகிறார்'' என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments