முதல்வர் பழனிசாமியை விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், 'ஒரே குடும்பத்தின் ஏகபோக, வாரிசு அரசியல் வீழ்த்தப்படும்' என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் 16 தீர்மானங்களை அதிமுக நிறைவேற்றியது.
அதில் ஒரு தீர்மானத்தில், 'அதிமுக அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகத் திறமைக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல், பக்குவமோ பண்பாடோ இன்றி விமர்சித்து வரும் திமுக தலைவருக்கும், அவருக்கு கட்சிக்கும் கண்டனம்' என்று திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மற்றொரு தீர்மானத்தில், 'தமிழ்நாட்டில் தீய சக்திகள் தலைதூக்குவதை முறியடித்து, ஒரே குடும்பத்தின் ஏகபோக, வாரிசு அரசியலை வீழ்த்தி, அண்ணாவும் எம்.ஜி.ஆரும் கனவு கண்டவாறு உண்மையான ஜனநாயகம் தழைக்க உழைப்போம்' என்று கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments