டாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

LATEST NEWS

500/recent/ticker-posts

டாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

தமிழகத்தில் மதுக்கடைகளில் விற்பனை செய்யும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

வழக்கு ஒன்றில் உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, தமிழகத்தில் மதுக்கடைகளில் விற்பனை செய்யும் மதுவுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். டாஸ்மாக்கில் மதுபான விலை பட்டியலை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விவரம்:

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனர் ராஜேஸ்வரிபிரியா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " தமிழகத்தில் 5823 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாதத்திற்கு கோடிக்கணக்கில் தமிழக அரசிற்கு வருமானம் கிடைக்கிறது. தமிழக அரசின் முதுகெலும்பாக மதுபானக்கடை வருமானம் உள்ளது. ஆனால் தமிழகத்திலுள்ள மதுபான கடைகளில் சட்ட விரோத மற்றும் ஒழுங்கற்ற முறையில் மதுபான விற்பனையானது நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளில் ரசீது வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு மதுபானக் கடையிலும் ரசீது வழங்கப்படுவதில்லை என தெரிவித்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், மேற்கண்ட உத்தரவுகளை கூறியது, மேலும், அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பவும், தவறும் விற்பனை பிரதிநிதிகள் உட்பட எவராயினும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், உத்தரவு அமல் படுத்தப்பட்டது தொடர்பாக பிப்ரவரி 6 ல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3bZwpmP
via IFTTT

Post a Comment

0 Comments