“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி

LATEST NEWS

500/recent/ticker-posts

“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி

சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், இன்று பிரதமர் மோடியையும் சந்தித்தார். அதனைத்தொடர்ந்து டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவரிடம் அமித் ஷாவுடன் நடந்த ஆலோசனைக் குறித்து கேட்டபோது, “ அமித் ஷா உடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று கூறினார்.

image

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், “ஜெயலலிதா இருக்கும்போது சசிகலா அதிமுகவிலேயே இல்லை. சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை” என்றார். 

மேலும் பேசிய அவர் , “தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுமாறு பிரதமரிடம் அழைப்பு விடுத்தேன். முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைக்கவும் அழைப்பு விடுத்தேன். அதனை பிரதமர் ஏற்றுள்ளார்.

வண்ணாரப்பேட்டை -விம்கோ நகர் மெட்ரோ ரயில்சேவை தொடக்க விழாவுக்கு பிரதமரை அழைத்தேன். காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம், கல்லணை சீரமைப்பு திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமரை அழைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று இலங்கை சிறையில் இருந்து 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளேன்.

image

நிவர், புரெவி புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க பிரதமரிடம் வலியுறுத்தினேன். பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் நிதி ஆதாரம் பெற அனுமதி அளிக்க கோரிக்கை விடுத்துள்ளேன். துறை வாரியான கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் மனுக்கள் அளித்துள்ளேன். எனது கோரிக்கைகளை  பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்” என்றார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qBoUXg
via IFTTT

Post a Comment

0 Comments