ஐபிஎல் ஒரே சீசனில் 20க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்திய பந்துவீச்சாளர் என்ற பும்ராவின் சாதனையை முறியடித்துள்ளார் உம்ரான் மாலிக்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 65-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. இதனைத்தொடர்ந்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் ஐதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணி தரப்பில் உம்ரான் மாலிக் 3 ஓவர்கள் வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் 5 வீரர்கள் பட்டியலில் உம்ரான் மாலிக் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் ஐபிஎல் ஒரே சீசனில் 20க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் இந்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை உம்ரான் மாலிக் படைத்தார். இதற்கு முன்னதாக 2017 ஐபிஎல் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா தனது 23-வது வயதில் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார். தற்போது உம்ரான் மாலிக் தனது 22-வது வயதில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் 5 வீரர்கள் பட்டியலில் முறையே யுஸ்வேந்திர சஹால் (24), வனிந்து ஹசரங்க (23), ககிசோ ரபாடா (22), உம்ரான் மாலிக் (21), குல்தீப் யாதவ் (20) ஆகியோர் உள்ளனர்.
இதையும் படிக்கலாம்: மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/kvHxpfY
via IFTTT
0 Comments