அடையாற்றில் 3 நாள்களாக தேடியும் கிடைக்காத ராயபுரம் திமுக பிரமுகர் தலை; தேடுதல் பணி தொய்வு

LATEST NEWS

500/recent/ticker-posts

அடையாற்றில் 3 நாள்களாக தேடியும் கிடைக்காத ராயபுரம் திமுக பிரமுகர் தலை; தேடுதல் பணி தொய்வு

சென்னை ராயபுரத்தில் திமுக பிரமுகர் சக்கரபாணி என்பவர் சில தினங்களுக்கு முன் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார். ராயபுரத்தைச் சேர்ந்த தமீம் பானு, அவரது சகோதரர் வாசிம் பாஷா ஆகியோர் சேர்ந்து சக்கரபாணியின் தலையை துண்டித்து கொலை செய்ததாக தகவல் வெளியான நிலையில், 3 நாட்களை தேடியும் தலை கிடைக்காமல் உள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆற்றில் நண்டு பிடிப்பவர்களின் உதவியை நாடி உள்ளது காவல்துறை. மரபணு பரிசோதனைக்கு உடல் பாகங்கள் ஐதராபாத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை மணலியை சேர்ந்த திமுக பிரமுகரான சக்கரபாணி (வயது 65). கடந்த 10ஆம் தேதி முதல் அவரை காணவில்லை என அவரது மகன் மணலி காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்திருக்கிறார். போலீசார் சக்கரபாணியின் செல்போன் எண்ணை ஆராய்ந்த போது ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாக்குமூட்டையில் துண்டுகளாக வெட்டி கொலை செய்திருப்பதை கண்டறிந்துள்ளனர். விசாரித்து பார்த்தபோது, தகாத உறவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தமீம் பானு, அவரது சகோதரர் வாஷிம்பாஷா கூட்டாக சேர்ந்து திமுக பிரமுகரான சக்கரபாணியை துண்டாக வெட்டி கொலை செய்தது காவல்துறை தெரியவந்துள்ளது. இதற்கு உடந்தையாக ஆட்டோ ஓட்டுனர் டில்லி பாபு என்பவர் இருந்ததும் தெரிந்துள்ளது. அதைத்தொடர்ந்து 3 பேரையும் ராயபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

image

வெட்டப்பட்ட சக்கரபாணியின் தலையை அடையாற்றில் வீசியதாக வாஷிம் பாஷா வாக்குமூலம் அளித்துள்ளார். குறிப்பாக இந்த வழக்கில் வீசப்பட்ட சக்கரபாணியின் தலை, வழக்கிற்கு முக்கியம் என்பதால் வாஷிம் பாஷா தான் தலையை தூக்கி வீசிய இடத்தை அடையாளம் காட்டி உள்ளார். அதனடிப்படையில் ராயபுரம் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் அடையாறில் வீசப்பட்ட தலையை தீவிரமாக தேடி உள்ளனர். கடந்த 3 நாட்களாக ராயபுரம் போலீசார் தீயணைப்புத் துறையினருடன் சேர்ந்து தலையை அடையாறு ஆற்றில் தேடி வந்தனர். ஆனால் தற்போதுவரை தலைப்பகுதி கிடைக்கவில்லை.

இதையும் படிங்க... ஐபிஎல்: 'ப்ளே ஆஃப்' வாய்ப்பு யாருக்கு? டெல்லி - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

இப்பணிக்காக 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் திருவான்மியூர், அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அனைவரும் அடையாற்றில் தலையை தீவிரமாக ரப்பர் படகுகள் மூலம் தேடி வந்திருக்கின்றனர். மேலும் ராட்சத கொக்கி மூலம் ஆற்றில் இறங்கியும் தேடி உள்ளனர். போலவே ஸ்கூபா வீரர்களும் ஆற்றின் உள்ளே இறங்கி தீவிரமாக தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை என சொல்லப்படுகிறது.

image

இதனால் இன்று காலை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதி மீனவர்கள் உதவியோடு தலையை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட உள்ளனர். குறிப்பாக ஆற்றில் இறங்கி நண்டு பிடிப்பவர்களின் உதவியோடு காவல்துறையினர் தலையை தேடும் முயற்சியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக ஆற்றில் ஆழமாக இறங்கி கைகளாலேயே தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையில் சக்கரபாணியின் தலையில்லாத உடல் ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. ஆனால் அது சக்கரபாணியின் உடலா என்பதனை நிருபிக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது. அதனால் உடலின் பாகங்கள் மரபணு பரிசோதனைக்காக ஐதராபாத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையில் அது சக்கர பாணியின் உடல் தான் என்பது உறுதியான பிறகு குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments