குரங்கு வைரஸ் என்கிற மன்ங்கிபாக்ஸ் வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவத்தொடங்கியதை அடுத்து, கொரோனா தொற்றைப்போல் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள மாரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் தலைமை தர அதிகாரியும், தொற்று நோய் தடுப்பு தலைவருமான டாக்டர் ஃபஹீம் யூனுஸ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குரங்கு வைரஸ் பாதிப்புகள் கவனிக்கப்படவேண்டியவை தான் என்றாலும், அவை கொரோனாவைப்போல் பெரும் பாதிப்பு அலையை உருவாக்கும் வாய்ப்புகள் பூஜ்ஜியம்தான் என்கிறார் அவர். மக்களை அமைதியுடன் இருக்க வலியுறுத்தும் அவர், குரங்கு வைரஸ் கொரோனாவைப்போல் பெருந்தொற்றை ஏற்படுத்தாது என்பதற்கான 5 காரணங்களையும் முன்வைக்கிறார்.
1. கொரோனா வைரஸ் போல் குரங்கு வைரஸ் வேகமாக பரவக்கூடியது அல்ல. அதேபோல் உயிரை பறிக்கும் அளவிற்கு ஆபத்தானதும் அல்ல. சின்னம்மை தடுப்பூசியாலேயே குரங்கு வைரஸ் பரவலை தடுக்கலாம். குரங்கு வைரஸ் மிகவும் அரிதானது, கொரோனாவைவிட குறைவாகவே பரவும்தன்மை கொண்டது.
2. பரவும் தன்மை பூஜ்ஜியம் என்று கூறுவதற்கான காரணம்: கொரோனாவைப்போல் வேகமாக பரவாது. குறிப்பாக உயிரிழப்பு என்பது மிகமிக அரிது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக குரங்கு வைரஸ் இருக்கிறது.
3. குரங்கு அம்மை சின்னம்மைக்கு ஒப்பானது என்றும், இது அரிதாகப் பரவக்கூடிய உயர் விளைவு தொற்று நோய் என்றும் UK சுகாதார பாதுக்காப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
4. தொடக்கத்தில் இந்த குரங்கு வைரஸ் ஆண்களுடன் ஆண் உடலுறவு கொள்ளும்போது பரவியதாக கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். மேலும் இந்த தொற்று கட்டுப்படுத்தக்கூடியதுதான் என்றாலும், நாடுகளிடையே பரவக்கூடியது என்கிறது WHO.
5. மே 7ஆம் தேதி முதல் தொற்று பிரிட்டனில் கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது 12க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவியுள்ளது. அதேசமயம் மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவைப்போல் எப்போதும் மற்றநாடுகளில் காணப்படுவதில்லை. இதுவரை 200 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தாலும் இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லை.
சில மருந்துகள் குரங்கு வைரஸ் அறிகுறிகளை தடுத்து பாதிப்பை குறைக்கிறது என்றாலும், குரங்கு வைரஸுக்கென்று தரச்சான்று பெற்ற பிரத்யேக மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/9G8m5fi
via IFTTT
0 Comments