குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், பெங்களூரு அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 67-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து, 169 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டூபிளசிஸ் களமிறங்கினர். இரு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் டூபிளசிஸ் 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய மெக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 18 பந்துகளை சந்தித்த மேக்ஸ்வெல் 5 பவுண்டர்கள் 2 சிக்சர்களுடன் 40 ரன்கள் குவித்தார்.
இறுதியில், 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு 170 ரன்கள் குவித்தது. இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் நான்காவது இடத்திற்கு முன்னேறி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும் வரும் 22ம் தேதி நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டியின் முடிவே முக்கியமானதாகும். மும்பை உடனான ஆட்டத்தில் டெல்லி அணி தோற்கும் பட்சத்தில் பெங்களூரு எளிதாக பிளே ஆஃப் வாய்ப்பை பெறும். ஒருவேளை வெற்றிபெற்றால் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு பின்தங்கும்.
இதையும் படிக்கலாம்: கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/XLlcE5g
via IFTTT
0 Comments