லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்த `பிரதமர் வீடு கட்டும் திட்ட’ ஊழியர்; பயனாளி தற்கொலை

LATEST NEWS

500/recent/ticker-posts

லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்த `பிரதமர் வீடு கட்டும் திட்ட’ ஊழியர்; பயனாளி தற்கொலை

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தவணைத் தொகையை பயனாளிக்கு ஏற்றிவிட தாமதம் செய்ததால், அப்பயனாளி தற்கொலை செய்து உயிரிழந்திருக்கிறார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட, கமுதகுடி பகுதியில் வசித்து வருபவர் லெனின். அவருடைய மகன் மணிகண்டன். கூரை வீட்டில் தங்கிவந்த நிலையில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்காக வேலங்குடி ஊராட்சி பணிபார்வையாளர் மகேஸ்வரனை இவர்கள் அணுகியுள்ளனர். அங்கு, இவர்களுக்கு வீடு கட்டித்தருவதில் தாமதித்திருக்கிறார்கள். மேலும் `நீங்கள் வீடு கட்டும் வேலையை ஆரம்பியுங்கள்’ என கூறியுள்ளார். இதனால் மணிகண்டன் தனது தந்தை லெனின் பெயரில் வீடுகட்ட ஆரம்பித்துள்ளார். வீடு கட்ட ஆரம்பித்த பிறகு, மீண்டும் மகேஸ்வரனை அணுகியுள்ளார் மணிகண்டன். ஆனால் மகேஸ்வரன யாரிடம் கேட்டு வீடுகட்ட ஆரம்பித்து உள்ளீர்கள் என முன்பு கூறியதற்கு மாற்றாக கூறியதாக சொல்லப்படுகிறது.

image

அதன்பிறகு 3000 ரூபாய் முதல் முறையாக மணிகண்டனிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அதன்பிறகு பயனாளி பட்டியலில் மணிகண்டனின் தந்தை லெனினை சேர்த்துள்ளதாக சொல்லப்படுகிறது. படிப்படியாக மணிகண்டன் வீடுகட்ட ஆரம்பித்துள்ளார். ஒவ்வொரு தவணைத் தொகை விடுவிக்கும் போதும் மகேஸ்வரன் மணிகண்டனிடம் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்பிறகு ஒரு தவணை வந்த பொழுது ரூ.15000 மணிகண்டன் மகேஸ்வரனுக்கு கொடுத்துள்ளார். அதன்பிறகு உள்ள தவணைத் தொகைகளை விடுவிக்க மகேஸ்வரன் தொடர்ந்து காலதாமதம் செய்துள்ளார்.

வீடு கட்டும் பொழுது ஒவ்வொரு படிநிலை முடிந்ததும் அந்த படி நிலைக்கு ஏற்றவாறு தவணைத் தொகையை விடுவிப்பது அரசின் வழக்கம். அதுபோல கடைசியாக வீடு இறுதி பணிகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது தவணை தொகையை விடுவிக்க மணிகண்டன் மகேஸ்வரனை அணுகியுள்ளார். அதற்கு மகேஸ்வரன், `விரைவில் விடுவிக்கிறேன்’ என காலதாமதம் செய்து வந்துள்ளார். இதனால் மணிகண்டன் வெளிநாட்டுக்கு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் நண்பர்களிடம் வாங்கிய பணம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வீட்டை முக்கால்வாசி பூர்த்தி செய்துள்ளார். பூர்த்தி செய்த பிறகு மீண்டும் மகேஸ்வரனை அணுகி தவணைத் தொகையை விடுவியுங்கள் என கேட்டுள்ளார்.

image

ஆனால் மகேஸ்வரன் தொடர்ந்து காலதாமதம் செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன், மகேஸ்வரன் அவரிடம் லஞ்சம் கேட்டது - இவர் கொடுத்தது உள்ளிட்ட பல விஷயங்களை பேசி வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டு விஷம் அருந்தியுள்ளார். `தன்னுடைய இறப்புக்கு காரணம் இவர்தான்’ என குறிப்பிட்டு அந்த வீடியோவில் பேசியுள்ளார். அதன் பிறகு விஷம் அருந்தியதால் அவர் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரைக்கால் மருத்துவமனை நிர்வாகம் மணிகண்டன் வசிக்கும் கமுதக்குடி ஊருக்கு உரிய பேரளம் காவல் நிலையத்தில் விவரத்தை கூறியுள்ளது.

இதையும் படிங்க... `எங்கள் எல்லோருக்கும் முதல்வர் ஸ்டாலின்தான் தலைமை ஆசிரியர்’- அமைச்சர் அன்பில் மகேஷ்

தொடர்ந்து பேரளம் காவல்துறையினர் விசாரித்து வந்துள்ளார்கள். வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோ காரணமாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பணி பார்வையாளர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சைக்காக காரைக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் பேரளம் காவல்துறையினர் மணிகண்டன் தந்தையிடம் விவரங்களைக் கேட்டு பெற்றுள்ளார்கள் தொடர்ந்து பேரளம் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

image

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் கொடுக்கப்படும் தொகை மற்றும் இரும்பு சிமெண்ட் உள்ளிட்டவை சேர்த்தால் கூட 3 லட்சத்திற்கு உள்ளாக தான் வருமென்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள தொகையை பயனாளி தான் போட்டு வீடு கட்ட வேண்டும். இந்த நிலையில் அந்தத் தொகையை பயனாளி பெறுவதற்கு இவ்வளவு லஞ்சம் புழங்குவதும், அதனால் ஒருவர் தற்கொலை செய்திருப்பதும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

- மாதவன் குருநாதன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments