ஹைதராபாத்தில் 17 வயது சிறுமியை பென்ஸ் காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் அருகே கடந்த வாரம், 17 வயதான சிறுமி ஒருவர், 5 பேர் கொண்ட கும்பலால் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் கடத்தப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து காருக்குள்ளேயே கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து பேரில் 3 பேர் சிறுவர்கள் ஆவார்.
சம்பவத்தன்று 5 பேர் கொண்ட கும்பலுடன் ஜூப்ளி ஹில்ஸ் அருகே சிறுமி பேசி கொண்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சிறுமி ஒருவர் தோழியுடன் மதுபான விடுதிக்குச் சென்றிருக்கிறார். அவரது தோழி விரைவாகச் சென்றுவிட சிறுமி அங்கிருந்த இளைஞர்களுடன் பேசி வந்துள்ளார். அவர்கள் சிறுமியை காரில் வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறியுள்ளனர். அப்போது, காரிலேயே அந்த கும்பல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தததாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் அரசியல் பிரமுகர்களின் மகன்கள், பேரன்களுக்கு தொடர்பிருப்பதாகவும், ஒரு அமைச்சரின் பேரனுக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த வன்கொடுமை சம்பவத்தில் அமைச்சரின் பேரன் ஈடுபடவில்லை என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.
இதற்கிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பின்புலத்தை குறித்து பொருட்படுத்தாமல் தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்படி தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கேடி ராமராவ் அம்மாநில டிஜிபிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தெலுங்கானா பாஜக, இந்த வழக்கில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் படிக்கலாம்: பசுவை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 22 வயது இளைஞர் கைது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments