ஆவடியில் தண்ணீர் லாரி ஓட்டுனரை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
ஆவடி கௌரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன் குமார் என்ற மனோஜ் (25). .இவர், அதே பகுதியில் தண்ணீர் ட்ராக்டர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். அதேபோல் ஆவடி புதுநகர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவரும் அதே பகுதியில் குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வரும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மோகன் குமார், பிரபுவிடம் ரூ.20 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து மோகன் குமார் பணத்தை திருப்பித் தராமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பிரபுக்கும் மோகன் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு மாதத்தில் பணத்தை தந்து விடுவதாக பிரபுவிடம் கூறிய மோகன் குமார் பணத்தை தராமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை பிரபு மற்றும் அவரது நண்பர்கள் மோகன் குமாரிடம் பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பிரபு மற்றும் அவரது நண்பர்களான சதீஷ், பிரான்சிஸ் ஆகிய 3 பேரும்இரும்பு ராடால் மோகன் குமாரை தாக்கியுள்ளனர்.இதில் மோகன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து தகவல் அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பிரபு, சதீஸ், பிரான்சிஸ் ஆகிய 3 பேரை கைது செய்த ஆவடி போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments