``தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணிக்கப் போகிறோம்”- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

LATEST NEWS

500/recent/ticker-posts

``தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டை புறக்கணிக்கப் போகிறோம்”- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

இன்றும் நாளையும் குஜராத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நாடு முழுவதும் நடைபெற உள்ளகல்வி அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டை, தமிழ்நாடு புறக்கணித்துள்ளது.

இந்த மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை அமைச்சர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இருவருமே கலந்துகொள்ளவில்லை. இம்மாநாட்டில் தேசிய கல்வி கொள்கை குறித்தும், தேசிய அளவில் பாடத்திட்ட மாற்றம் குறித்தும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்த்து வரும் நிலையில் குஜராத்தில் நடைபெறும் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு புறக்கணித்திருப்பது, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

image

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய தலைமுறைக்கு அளித்த தகவலில், “இன்று மற்றும் நாளை குஜராத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டிற்கு அழைப்பு வந்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். ஆகவே அதில் நான் பங்கேற்கவில்லை” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/tPxZXVn
via IFTTT

Post a Comment

0 Comments