அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்!

LATEST NEWS

500/recent/ticker-posts

அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்!

அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதி வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகமுள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை அனுப்பிய பிறகு அவற்றைத் திருத்துவதற்கான வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. பயனர்கள் தங்கள் மெசேஜ்களில் உள்ள தட்டச்சுப் பிழைகளை நீக்க இனி அந்த மெசேஜை முழுமையாக டெலிட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தவறான மெசேஜ்களை கிளிக் செய்து அதை திருத்த இந்த புதிய வசதி உதவும். வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதி சோதனை முயற்சியாக தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது. சோதனை முடிந்தவுடன் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும்.

whatsapp edit message option testing image wabetainfo WhatsApp

இது தவிர வாட்ஸ்அப் சமீபத்தில் மெசேஜ்களுக்கு எமோஜிகள் மூலம் ரிப்ளை செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. இந்த எமோஜிகள் ஒரே ஸ்கின் டோனில் இருக்கும் நிலையில் கருப்பு, வெள்ளை, மாநிறம் உள்பட பல ஸ்கின் டோன்கள் கொண்ட் எமோஜிகளை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இந்த வசதியும் தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது. சோதனை முடிந்தவுடன் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும். ஆனால் எப்போது இவ்விரு வசதிகளும் பயனர்களுக்கு வழங்கப்படும் என்பது குறித்த தகவலை வாட்ஸ்அப் தெரிவிக்கவில்லை.

whatsapp message reactions skin tone update image wabetainfo WhatsApp

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments