'அணியில் இருந்து தோனி நீக்கியதும் ரிட்டயர்ட் ஆக விரும்பினேன். ஆனால்..'. - சேவாக்

LATEST NEWS

500/recent/ticker-posts

'அணியில் இருந்து தோனி நீக்கியதும் ரிட்டயர்ட் ஆக விரும்பினேன். ஆனால்..'. - சேவாக்

“ஆடும் லெவனில் இருந்து தோனி நீக்கியதும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ரிட்டயர்ட் ஆக விரும்பினேன். ஆனால் சச்சின் என் மனதை மாற்றினார்” என்று 2008 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நினைவு கூர்ந்து சேவாக் பேசியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 7 ஆண்டுகளுக்குப் பிறகும், வீரேந்திர சேவாக் இதுவரை மிக அழிவுகரமான தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இன்னும் பல வருடங்கள் இப்படியே இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் சேவாக்கின் வாழ்க்கையில் ஒரு கசப்ப்பான சம்பவம் ஒன்று இருந்தது, அப்போது அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ஒருநாள் போட்டிகளில் இருந்து ரிட்டயர்ட் ஆக விரும்பியுள்ளார். சமீபத்திய உரையாடலில், 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தான் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக சேவாக் கூறினார்.

Virender Sehwag's 219 run-knock recalled ahead of India-Australia third ODI at Indore | Sports News,The Indian Express

"2008-ல் நாங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, ஓய்வு பற்றிய கேள்வி என் மனதில் எழுந்தது. நான் டெஸ்ட் தொடரில் மீண்டும் ஒரு 150 ரன்கள் எடுத்தேன். ஒருநாள் போட்டிகளில் நான்கு போட்டிகளில் என்னால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. அதனால் தோனி என்னை ஆடும் லெவனில் இருந்து நீக்கினார். அப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விலக வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடுவேன் என்று நினைத்தேன்" என சேவாக் கூறினார்.

Top 10 Highest partnerships in World Cup for India

“அப்போது சச்சின் டெண்டுல்கர் என்னைத் தடுத்து நிறுத்தினார். 'இது உங்கள் வாழ்க்கையின் மோசமான கட்டம். காத்திருங்கள், இந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள், நன்றாக யோசித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்யுங்கள்' என்றார். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் நான் எனது ஓய்வை அறிவிக்கவில்லை. "என்று சேவாக் கூறினார்.

முத்தரப்புத் தொடரில் இந்தியாவின் முதல் நான்கு போட்டிகளில் சேவாக் 6, 33, 11, மற்றும் 14 ரன்கள் எடுத்த பிறகு, ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த லீக் ஆட்டத்தில் சேவாக் மீண்டும் ஆடும் லெவனிற்கு திரும்பினார். சேவாக் மேலும் 7-8 ஆண்டுகள் இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடினார், மேலும் 2011 இல் ODI உலகக் கோப்பையையும் வென்றார்.

Seek Sachin Tendulkar's help to overcome poor run: Sunil Gavaskar to Virat Kohli

விராட் கோலியின் சீரற்ற ஃபார்ம் மற்றும் அவருக்கு ஓய்வு தேவையா என்று கேட்ட கேள்விக்குத்தான் சேவாக் தான் சந்தித்த கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்தார். மேலும் அவர், “இரண்டு வகையான வீரர்கள் இருக்கிறார்கள் - சவால்களை விரும்புபவர்கள். அவர்களில் விராட் ஒருவர். எல்லா விமர்சனங்களையும் அவர் கேட்கிறார், அவை தவறு என்று நிரூபிக்க ரன்களை அடித்து களத்தில் எதிர்வினையாற்றுகிறார். இன்னொரு வகை. விமர்சனங்களால் பாதிக்கப்படாதவர்கள், ஏனென்றால் நாள் முடிவில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். நான் அப்படிப்பட்ட வீரர். யார் என்னை விமர்சித்தாலும் நான் கவலைப்படவில்லை. நான் விளையாட விரும்பினேன், ரன் குவித்து வீட்டிற்கு செல்ல விரும்பினேன்” என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/p85mYWj
via IFTTT

Post a Comment

0 Comments