
6 வயது பெண் குழந்தையின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய கோர சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியிருக்கிறது.
லக்னோவைச் சேர்ந்தவர்கள் பூனம் - அஜய் குமார் என்ற தம்பதிக்கு திருமணமானதிலிருந்து குழந்தை இல்லாததால் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை ஒன்றை அஜய் குமார் தத்தெடுத்திருக்கிறார்.
ஆனால், அஜய் குழந்தையை தத்தெடுத்தது பூனமிற்கு பிடிக்காததால் அந்த 6 வயது பெண் குழந்தை மீது தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்.

இப்படி இருக்கையில், கடந்த புதனன்று வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த போது, தத்துக் குழந்தையான அந்த சிறுமியின் அந்தரங்க பாகம் மீது பூனம் கொதிக்க கொதிக்க இருந்த எண்ணெய்யை ஊற்றியிருக்கிறார்.
இதனையறிந்த அஜய் குமார் சிறுமியை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார். இதனிடையே மனைவி பூனம் மீது போலீஸில் புகாரும் அளித்திருக்கிறார்.
இதனையடுத்து தக்கூர்கஞ்ச் காவல் நிலைய அதிகாரி ஹரி ஷங்கர் சந்திரா அஜய்யின் மனைவி பூனமை கைது செய்திருக்கிறார். 6 வயது சிறுமி மீது எண்ணெய்யை ஊற்றிய பெண்ணின் கொடூரச் செயலை அறிந்த சம்பவம் நடந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments