முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!

LATEST NEWS

500/recent/ticker-posts

முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!

இளம்பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் குண்டா மாவட்டம் காலனிகஞ்ச் பகுதியை சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜாவித் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அந்த பெண்ணை ஜாவித் மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த பெண்ணை ஜாவித் அங்கு உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்ததாகவும், பின்னர் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து ஜாவித் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதற்குப்பின் அந்த பெண்ணை ஜாவித் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளாதாகத் தெரிகிறது.

image

இதனைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி காலனிகஞ்ச் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் அந்த பெண்ணை இறக்கிவிட்டு விட்டு ஜாவித் தப்பிச்சென்றுள்ளார். தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிட்டுவேன் என ஜாவித் மிரட்டியுள்ளாதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தனது மகளை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஜாவித் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments